Buy Eecham Palam | Fruits, Fresh Organic Fruit, Kodaikanal Fresh Farm Fruits Online in Kodai
உலகெங்கிலும் பல வகையான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையில் இருக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்ற வகையில், மனிதர்கள் உண்ணத்தக்க பல வகையான பழங்கள் விளைகின்றன. பாலைவனப் பகுதிகளில் அதிகம் விளையும் ஒரு மரமாக பேரிச்சம் பழ மரம் இருக்கிறது. அந்த பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக ஈச்ச மரம் இருக்கிறது. அதில் விளையும் பழம் ஈச்சம் பழம் எனப்படுகிறது. இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டிருக்கும் ஈச்சமரத்தில் விளைகின்ற ஈச்சம் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஈச்சம் பழம் நன்மைகள் மலச்சிக்கல் உடலுக்கு உழைப்பின்றி இருப்பது, நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
எலும்புகள் ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
Reviews
There are no reviews yet.